News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News April 11, 2025

புதுக்கோட்டை இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 11.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் விவரம். பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு காவல்துறை அலுவலர்களை அழைத்து பயன்படுத்திக்கொள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர்.

News April 11, 2025

புதுக்கோட்டை மீனவ குடும்பங்களுக்கு நற்செய்தி

image

புதுக்கோட்டையில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 11, 2025

புதுக்கோட்டையில் மீன் பிடிக்க தடை 

image

புதுக்கோட்டையில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வ. விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதிகளில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்.

error: Content is protected !!