News August 24, 2024
புதுக்கோட்டையில் 28 மாணவர்கள் தேர்வு

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. இதில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாணவ, மாணவியர்கள் 28 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் மூன்று பேருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது சாதனையாக கருதப்படுகிறது.
Similar News
News November 25, 2025
புதுகை: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த சுல்லானியை சேர்ந்தவர் ஆத்மநாதன்(31). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர். இந்நிலையில் நேற்று சுல்லானியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா(50) அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

கூழையன்காட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 கிணறுகளில் குப்பை கழிவுகளை ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் கொட்டினார். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாக கிராம மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
புதுகை: இறந்தும் வாழும் இளம்பெண்!

புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரி (23) என்ற இளம்பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதன் மூலம் 6 பேருக்கு முருகேஸ்வரி மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உடலுக்கு இறுதி சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


