News March 24, 2025
புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

புதுகை சித்த மருத்துவமனை அலுவலகத்தில் உதவியாளர் டேட்டா அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு IT,B.Tech, BBA,BCA,BSC-IT ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.31க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News December 4, 2025
புதுகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

புதுகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
புதுகை: சட்ட விரோத மது விற்பனை செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த இளஞ்சாகுடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஐயப்பன் (49) என்பவர் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 4, 2025
புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்


