News April 16, 2024
புதுக்கோட்டையில் வாரச்சந்தைகள் மாற்றம்

புதுக்கோட்டை வாரச்சந்தை தேதி மாற்றம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று
தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் நடைபெறுவதை
முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை, ஆட்டு
சந்தை, பசு மாடு சந்தை, காய்கறி, மீன் சந்தை
18-04-2024 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 19, 2025
புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
புதுக்கோட்டையில் நாளை மின்தடை

புதுகை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.,20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தொழில் பேட்டை, ரங்கம்மாள் சத்திரம், முள்ளூர், ராயப்பட்டி, அபிராமி நகர், பாலன் நகர், பெரியார் நகர், ஜீவா நகர், சிட்கோ தஞ்சாவூர் சாலை ஆகிய பகுதியில் காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (55) என்பவர் நேற்று இரவு மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.