News March 22, 2024

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி!

image

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 17, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

நாகையை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.

News April 16, 2025

புதுக்கோட்டை: ரூ.15,000 மாத சம்பளத்தில் வேலை

image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 50 உதவியாளர் (Helper) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுளளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள்<> tnprivatejobs.tn.gov.in<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்..

error: Content is protected !!