News May 16, 2024

புதுக்கோட்டையில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 18, 2025

புதுகை: சாலை விபத்தில் கிரிக்கெட் வீரர் பரிதாப பலி

image

ஆலங்குடி, வம்பன் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24, (செப்.17) புதுகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வம்பன் வேளாண் கல்லூரி அருகே செல்லும் பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ஊர்காவலன் 42, ஓட்டி வந்த பாரத் பெண்ட்ஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News September 18, 2025

புதுகை: 10th போதும்… அரசு துறையில் வேலை!

image

புதுகை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

புதுகைள் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை!

image

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு நாளை(செப்.18) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில், நமணசமுத்திரம் PD shop, புதுகை சமூக நீதி மாணவியர் விடுதி, சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையம், மச்சுவாடி கால்நடை பண்ணை, வேப்பங்குடி கனிம விவசாய கலந்தாய்வு, கைக்குறிச்சி நான்கு வழி சாலை, அறந்தாங்கி பரமந்தூர் கோயில் பகுதியில் ஆய்வு நடைபெறுமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்

error: Content is protected !!