News August 8, 2024
புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

புதுகை: காரில் வந்து ஆடுகள் திருட்டு!

புதுகை, ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிப்பத்திரம் கண்மாய்க் கரைப்பகுதி மற்றும் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமங்களைச் சேர்ந்த சுந்தரம், சித்திரவள்ளி, பேச்சிமுத்து, பழனியாயி ஆகிய 4 பேரின் 10 ஆடுகள் டிச.04 இரவு திருடு போயுள்ளது. இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கார்களில் வரும் திருடர்கள் ஆடுகளை திருடிச் செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.