News August 16, 2024
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் விபத்தில் பலி!

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி இராமையா. இவர் இன்று வாண்டா கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
News December 1, 2025
புதுக்கோட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லத்திற்கே சென்று, அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் (02.12.2025) மற்றும் (03.12.2025) ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.30) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


