News August 10, 2024
புதுக்கோட்டையில் நாளை கனமழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 11ஆம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வங்க கடலில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை வீச கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு “மஞ்சள் அலர்ட்” விடப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
புதுகை: கார் கவிழ்ந்து முதியவர் பலி

புதுக்கோட்டை விடுதி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரது மகன் பழனிவேல் ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, தனது காரில் கும்பங்குளம் வழியாக சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 19, 2025
புதுகை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள திருவானைக்காவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பாப்பா (74), என்ற மூதாட்டி லேனா விளக்கு பகுதியில் உள்ள அவரது வயலில் மின்மோட்டார் இயக்கும்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டியின் உடல் திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
புதுகை: மாநகர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

SIR சிறப்பு வாக்காளர் திருத்த படிவத்தினை, பூர்த்தி செய்திருந்தாலும், பூர்த்தி செய்யப்படாமல் இருந்தாலும் SIR படிவத்தை (19.11.2025) முதல் (23.11.2025) வரை மதியம் 2 மணி முதல், மாலை 5:45மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம் அந்த அந்த (வாக்குச்சாவடி நிலையங்களில்) நேரடியாக சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


