News August 17, 2024
புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 15, 2025
புதுகை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
புதுகை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
புதுக்கோட்டை: போக்சோ சட்டத்தில் கைது!

புதுகை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஜீவா 27, கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு கிண்டல் செய்தும், கையைப் பிடித்து வம்பு இழுத்து உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவியின் தந்தையிடம் உன் மகளை கடத்தி சென்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜீவாவை கைது செய்தனர்.


