News March 14, 2025
புதுக்கோட்டையில் கூட்டு குடிநீர் திட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.1820 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும், புதுக்கோட்டையில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காக்கள் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை மக்களே SHARE பண்ணுங்க..
Similar News
News April 19, 2025
கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News April 19, 2025
புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 19, 2025
புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)