News August 16, 2024
புதுக்கோட்டை கலெக்டர் வேதனை

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அருணா நேற்று கலந்து கொண்டாா். அப்போது, பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், “இதுபோன்ற சட்டவிரோத செயல்களை யாரும் செய்ய வேண்டாம். பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியை கொடுத்தால் உயர்வார்கள்” என்றார்.
Similar News
News November 27, 2025
புதுக்கோட்டை: பைக்கில் இருந்து விழுந்த இளைஞர் பலி

ராப்பூசல் புளியம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரது நண்பர் கத்தங்குடிப்பட்டியை சேர்ந்தவர் மெய்யர்(எ) ரோஷன். இருவரும் பைக்கில் பெருங்குடிபட்டி, செங்குளம் கலங்கி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக மண் மேட்டு பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சோலைராஜா பரிதாபமாக பலியானார். ரோஷன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரனை மெற்கொண்டு வருகின்றனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: வெறி நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்தில் மேய்ந்த ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகின. எனவே இந்த வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: கை விரலை கடித்து துப்பிய வாலிபர்

அன்னவாசல் அருகே வவ்வாநேரியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவர் மலம்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சொக்கம்பட்டியை சேர்ந்த கதிரேசன் என்பவர், வெள்ளைச்சாமி கடையில் கடனாக பீடி கேட்டுள்ளார். அதற்கு வெள்ளைச்சாமி பீடி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கதிரேசன் வெள்ளைச்சாமியின் கை விரலை கடித்து துண்டாக்கினார். இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கதிரேசனை கைது செய்தனர்.


