News August 15, 2024
புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
Similar News
News December 5, 2025
புதுகை: கடன் தொல்லையால் தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் (46). இவர் கந்தர்வகோட்டையில் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்த நிலையில், அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால், மன உளைச்சலில் புதன்கிழமை ஆனந்த பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
புதுகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லெட்சுமி தியேட்டர் அருகே கருப்பையா (30) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.


