News March 19, 2024

புதுகை: வாக்குவாதத்தால் பிரிந்த உயிர் 

image

மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News December 4, 2025

புதுகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

புதுகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

புதுகை: சட்ட விரோத மது விற்பனை செய்தவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த இளஞ்சாகுடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஐயப்பன் (49) என்பவர் சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

News December 4, 2025

புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்

error: Content is protected !!