News May 7, 2024
புதுகை மாவட்டத்தில் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்!

புதுகை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்- ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 96.97 சதவீதம், முழுமையான அரசு உதவிபெறும் பள்ளிகளில் 94.73 சதவீதம், அரசுப் பள்ளிகளில் 91.80 சதவீதம், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.14 சதவீதம், சுயநிதிப் பள்ளிகளில் 96.68 சதவீதம், சுயநிதி(மெட்ரிக்) பள்ளிகளில் 99.14 சதவீதம் பெற்றுள்ளன. மாநில அளவில் புதுகை மாவட்டம் 24 வது இடத்தில் உள்ளது.
Similar News
News April 20, 2025
அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News April 19, 2025
புதுக்கோட்டை: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தன்னவாசல் அமைந்துள்ளது,இங்குள்ள சமனர் குகைகளில் ஒவியங்கள்,அகழ்வராச்சிகளின்படி புதைக்கப்பட்ட பானைகளும்,மனித எலும்புகூடுகளும் உள்ளது,மலையழகும்,பூங்காக்களும்,சிற்பக்கலை,
ஒவியக்கலைகள் இந்த சித்தன்னவாசல் சுற்றுலாதலத்தில் உள்ளது,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க