News March 19, 2024
புதுகை: மாணவனை தாக்கிய போதை ஆசாமி- கைது

காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிஹரன் (13). இவர் நேற்று வயலோகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த ஹரிஹரனை அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் மது போதையில் கட்டையால் தாக்கியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ராமனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2025
புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News April 9, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 08.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
தமிழக அரசின் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுய உதவி குழு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவை ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் தகுதியானவர்கள் எனவும் மணிமேகலை விருது பெற வட்டார மையங்களில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்து பயனடைய வேண்டுமென ஆட்சியர் அறிவித்துள்ளார்.