News June 25, 2024

புதுகை: பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!

image

புதுகையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று மணப்பாறை, அன்னவாசல் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதி டயர் வெடித்ததில் பலத்த சத்தத்துடன் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் பயணிகளை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News November 28, 2025

புதுகை: அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

புதுகை: 350 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாநகரில், மேல 3ஆம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதில், 350 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்து 6000 அபராதம் விதித்தனர்.

News November 28, 2025

புதுகை: துணை நடிகர் திடீர் பலி

image

புதுகை நகர் மன்றத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சினிமா சூட்டிங் சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மக்கள் கூட்டம் நிற்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துணை நடிகர் அய்யநாதன் (45), அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். நேற்று திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!