News March 5, 2025

புதுகை: நீதிமன்றத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

image

அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா (58). இவர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் இவர் மீது உள்ள வணிக பொருளாதார குற்ற வழக்கில் ஆஜராகி விட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் இறங்கி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News April 20, 2025

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

புதுக்கோட்டை மக்களே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்: ▶துணை கண்காணிப்பாளர் அறந்தாங்கி – 9498100739, ▶துணை கண்காணிப்பாளர் ஆலங்குடி – 9498100764, ▶துணை கண்காணிப்பாளர் புதுக்கோட்டை – 9498100731, ▶துணை கண்காணிப்பாளர் பொன்னமராவதி – 9498100755, ▶துணை கண்காணிப்பாளர் கோட்டைப்பட்டினம்- 9498100774, ▶துணை கண்காணிப்பாளர் கீரனூர் – 9498100746. மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..

News April 20, 2025

அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

image

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

image

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

error: Content is protected !!