News August 8, 2024

புதுகை கவிஞருக்கு வைரமுத்து புகழாரம்

image

புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

Similar News

News November 22, 2025

புதுகை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுகை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே <<>>கிளிக் செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 22, 2025

புதுக்கோட்டையில் கோயில் உண்டியல் திருட்டு

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை பக்தர்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு உண்டியல் இல்லை. அதனை அடுத்து வயல் பகுதியில் அந்த உண்டியல் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரிமளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!