News February 17, 2025
புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News October 14, 2025
புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <
News October 14, 2025
புதுகையில் பரபரப்பு; ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை செய்ததில் ரூ 20 லட்சம் ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அமீர் உசேன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
புதுகை: வேளாண்துறையில் வேலை வாய்ப்பு

விராலிமலை, வேளாண்மை துறையில் டிஜிட்டல் சர்வே பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஸ்மார்ட் போன் மற்றும் இருசக்கர வாகனம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு விராலிமலை, நீர்பழனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை (9944018168, 9442100380) தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.