News September 12, 2024
புதுகை எம்எல்ஏ “வாக்கிங் வித் MLA” என்ற புது முயற்சி

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 10க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_MLA” என்ற நிகழ்வில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 6, 2025
புதுகை: திருடு போன தெரு விளக்கு இரும்பு குழாய்கள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் ஊராட்சியில், எல்.இ.டி தெரு விளக்குகளை பொருத்துவதற்கான, 800-க்கும் மேற்பட்ட, ‘எல்’ வடிவ வளைவு இரும்பு குழாய்களை திருடி, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமையில் அலுவலர்கள் அந்த இரும்பு கடையில் ஆய்வு செய்து அங்கு இருந்த இரும்பு குழாய்களை மீட்டனர்.
News December 6, 2025
புதுகை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 6, 2025
புதுக்கோட்டையில் விருது பெற வாய்ப்பு!

புதுகை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தயாரிப்புகள், பசுமை தொழில் ஆராய்ச்சி&அறிவியல் ஆய்வுகள், நீர் நிலைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல், மறு சுழற்சி செய்தல், கடலோர பாதுகாப்பு போன்ற திட்டங்களை மேற்கொண்டதற்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற www.tnpcb.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


