News November 23, 2024
புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலை 11.00 மணியளவில் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 3, 2026
புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 3, 2026
புதுகை: தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி!

பொன்னமராவதி அடுத்த காரையூரை சேர்ந்தவர் சுதர்சன்(21). இவர் (டி.29) அன்று காரையூர் அடுத்த காரவயல் வயல் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏரியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News January 3, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி-2 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


