News April 13, 2025

புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

Similar News

News December 1, 2025

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் விபத்தில் பலி!

image

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி இராமையா. இவர் இன்று வாண்டா கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

News December 1, 2025

புதுக்கோட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லத்திற்கே சென்று, அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் (02.12.2025) மற்றும் (03.12.2025) ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.30) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!