News April 12, 2025
புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
புதுகை: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க
News January 7, 2026
புதுக்கோட்டை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 7, 2026
புதுக்கோட்டை: 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


