News May 17, 2024
புதுகையில் 1 மணி வரை மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 10 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News November 22, 2025
புதுகை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுகை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
புதுக்கோட்டையில் கோயில் உண்டியல் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை பக்தர்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு உண்டியல் இல்லை. அதனை அடுத்து வயல் பகுதியில் அந்த உண்டியல் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரிமளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


