News April 9, 2025
புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
புதுகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கேபின் க்ருவ்” விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படையில் பல்வேறு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பும் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 23 வயது வரை உள்ள +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு செய்ய கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.