News August 8, 2024
புதுகையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2024 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான முன்பதிவை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25-ஆம் தேதிக்குள் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் தவறாமல் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
புதுகை: உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்

பழைய ஆதனக்கோட்டை கிரமாத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் இறந்தவர்களின் உடலை 1கி.மி தூரத்தில் உள்ள மாயனத்தில் அடக்கம் செய்கின்றனர். இந்நிலையில், மயத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறுதி சடங்கின் போது வயல் வழியே உடலை சேற்றில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
News November 26, 2025
புதுகை: இடிந்து விழுந்த வருவாய் ஆய்வாளர் அலுவல மேற்கூரை

ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சரக் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஸ்டவசமாக வருவாய் அலுவலர் உயிர்தப்பினார். மேலும் அலுவகத்தில் இருந்த மடிக்கணினி சேதமடைந்து. அரசு அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 26, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


