News June 28, 2024
புதுகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 14, 2025
புதுகை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

புதுகை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதுகை: சரக்கு வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்

புதுக்கோட்டை மருங்கி பட்டியிலிருந்து கன்னியாபட்டிக்கு வீரக்குமார் (33) இவரது தாய் பப்பு (65) ஆகிய இருவரும் நேற்று பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கீரனூர் பெட்ரோல் பங்க் அருகே, அவருக்கு பின்னால் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த லோகநாதன் (37) மோதியதில் பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


