News January 1, 2025
புதுகையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 4, 2026
புதுக்கோட்டை: திருமணத் தடைகள் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் சுகந்த பரிமளேஸ்வரர், இறைவி பெரிய நாயகி காட்சி தருகின்றனர். திருமணநாதர் என்ற பெயரும் சுகந்த பரிமளேஸ்வரருக்கு உண்டு. எனவே திருமணத்தடைகள் ஏற்படுவோர் இக்கோயிலில் பரிமளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. இதனை மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!
News January 4, 2026
புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 4, 2026
BREAKING புதுக்கோட்டை: இளைஞர் துடிதுடித்து பலி

அறந்தாங்கி அடுத்த விச்சூர் அருகில் உள்ள ஒட்டாங்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (22). இவர் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியை, கேட்ச் பிடிக்க சென்ற போது பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


