News August 26, 2024

புதுகையில் எச்ஐவி நோயாளிக்கு உணவு பொருட்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளோர் நல சங்கத்தில் எச்ஐவி தொற்று உள்ள மக்களுக்கு ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் மூலம் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன், மரம் நண்பர்கள் ரியாஸ்கான் குருதி கூடு அமைப்பில் செந்தில், ஆலங்குடி சக்தி கணேஷ், காமராஜபுரம் தயாநிதி ஊடகத்துறை சார்ந்த பழனியப்பன் மற்றும் சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 31, 2025

புதுக்கோட்டை மக்களே.. ஆதார் கார்டை நீங்களே புதுப்பிக்கலாம்!

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.!
▶️முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.(SHARE பண்ணுங்க)

News August 31, 2025

புதுக்கோட்டைக்கு மாநில அந்தஸ்து!

image

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது புதுக்கோட்டை சமஸ்தானம், தனி மாநிலமாக விளங்கிய எல்லைக் கல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

News August 31, 2025

அம்மன்குறிச்சி சிவன் கோவிலில் தேரோட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா நகரபட்டி அடுத்துள்ள அம்மன்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் இன்று (ஆக.,31) மாலை நடைபெற உள்ளது. இந்தத் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!