News March 6, 2025

புதிய மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் வரும் மார்ச்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை: இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மழை சேதம் தொடர்பான புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் உங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாராவது தொடர்பு கொண்டு கேட்டால் யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!