News March 24, 2025
புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி!

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 10, 2025
பெரம்பலூர்: மகளிர் சங்கத்தில் வேலை வாய்ப்பு

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கவுரவ செயலாளர், ஒரு கௌரவ இணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
பெரம்பலூரில் இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெனித்குமார் (31). இவருக்கும் இவரது மனைவி பாலஅபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெனித்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
பெரம்பலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.


