News August 16, 2024
புதிய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு நியமனம்

முதல்வர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, இதில் விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்டு செயல்படும் விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி புதிய டிஎஸ்பி-யாக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செஞ்சி டிஎஸ்பியாகவும் செயல்படுவார்.
Similar News
News December 6, 2025
விழுப்புரத்தில் அதிகாரி வீட்டில் நகை திருட்டு !

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் வீட்டில் 2 பவுன் நகைகள்,ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சிவசக்தி நகரைச் சேர்ந்த செந்தில்குமார்.இவர் இரவு தூங்கி எழுந்து பார்த்தபோதுகீழ் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து திருடு போயிருப்பதுதெரிய வந்தது. விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 5, 2025
விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
விழுப்புரம் நாதக வேட்பாளர் அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பெண் மருத்துவர் “அபிநயா” போட்டியிடுவதாக இன்று (டிச.05) அறிவிக்கப்பட்டுள்ளது.


