News December 5, 2024
புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து புதிய அப்டேட்

சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். இந்த 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 21 வரை 14 நாட்கள் நடைபெறும். வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டும் காலை நேரங்களில் நடைபெறும் கண்காட்சி, இந்த முறை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என பபாசி தெரிவித்துள்ளது.
News December 22, 2025
சென்னை: குடிபோதையில் CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார். விசாரணையில், சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் பெயரில் உள்ள சிம் கார்டிலிருந்து மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
சென்னை வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

சென்னை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


