News May 16, 2024

புதிய கிணறு கட்டடப்பணி:  ஆட்சியர் பழனி ஆய்வு

image

விழுப்புரம் அருகே முகையூர் கிராமத்தில் அருகில் உள்ள வீரங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar News

News December 15, 2025

விழுப்புரம்: லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது!

image

திருவெண்ணெய்நல்லூர், பெண்ணைவலம் அங்காளம்மன் கோயில் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.

விழுப்புரம்: மனைவி பிரிந்து சென்றதால் நடந்த சோகம்!

image

விக்கிரவாண்டி, பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலம் பாதித்திருந்த சசிக்குமார் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி உழவர் சந்தை அருகே மயங்கி விழுந்து காயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!