News October 7, 2024
புதிய காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு

திருப்பூர், சிறுபூலுவபட்டியில் செயல்பட்டு வந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகம் குமார் நகர் பகுதியில் 2.24 ஏக்கர் பரப்பளவில் 5 மாடி கட்டடமாக கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.
Similar News
News December 12, 2025
திருப்பூர்: வாக்காளர்களே! SIR UPDATE

திருப்பூர் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
திருப்பூரில் 3.60 லட்சம் பேருக்கு ஓட்டு இல்லையா?

திருப்பூர், வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்ட பனியன் தொழிலாளர் ஏராளமானோர், சொந்த ஊர் ஓட்டுரிமையே போதும் என்கிற அடிப்படையில், திருப்பூரில் கணக்கீட்டு படிவம் சமர்ப்பிக்காமல் உள்ளனர். அந்தவகையில், எட்டு சட்டசபை தொகுதிக்கான பட்டியலில் இருந்து, 15 சதவீத வாக்காளர்கள், அதாவது, 3.60 லட்சம் பேருக்கு மேல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
News December 12, 2025
திருப்பூர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

திருப்பூர், ஆண்டிபாளையம் பகுதியில் மத்திய போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த விரேந்திர குமார் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


