News April 22, 2025
புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில், நேற்று (ஏப்ரல் 21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளதாகவும், பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 20, 2025
சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி

கொடுங்கையூரை சேர்ந்தவர், 12 வயது சிறுமி. இவர், நேற்று தன் வீட்டருகே உள்ள மாளிகை கடைக்கு சென்று வந்த நிலையில், அவ்வழியே குடிபோதையில் வந்த மர்ம நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, கொடுங்கையூர், சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News November 20, 2025
சென்னை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சென்னை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
சென்னை: தாய்பால் குடித்த பச்சிளம் குழந்தை பலி

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை தாய் பால் குடிக்கும் பொழுது திடிரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குழந்தை பசி இன்மை காரணமாக அழுத நிலையில் அவரது தாய் குழந்தைக்கு பால் அளித்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் போதே குழந்தை உயிர் இழந்துள்ளது.


