News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 6, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பகண்டை அருகே உள்ள அவரியூர் கிராமத்தில் மாணவர்களை பார்த்த பொதுமக்கள் பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
News November 6, 2025
திருநங்கைக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கை ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.6) வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


