News May 17, 2024

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் சான்று

image

கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் சரண்யாதேவி நேற்று கூறுகையில், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1343 கல்வி நிறுவனங்களுக்கு புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள்
என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.

Similar News

News October 13, 2025

கோவை:இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (13.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

கோவை: கஞ்சா விற்ற நபர்கள் மீது குண்டாஸ்

image

கோவை செட்டிபாளையம் பகுதியில் கடந்த 14.09.2025 அன்று 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த, ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த கன்ட்ல ராம லட்சுமன்(20), மற்றும் மண்டல வீரபாபு (21) ஆகியோர்களை, செட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று உத்தரவிட்டு உள்ளார்.

News October 13, 2025

கோவை அருகே மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

image

கோவை, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் தடுப்பணையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 65 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!