News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
மயிலாடுதுறை: 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் மணி விழா நிகழ்வை முன்னிட்டு 27 இளையோருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 9.11.2025 அன்று திருமணங்கள் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு பவுன் தாலி, வஸ்திரம், சீர் வரிசைகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் நேரில் வந்து திருமடத்தில் விண்ணப்பத்தினை பெற்று 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
மயிலாடுதுறை: ஆணைகளை வழங்கிய கலெக்டர்

மயிலாடுதுறை வட்டம் ஆத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் வேண்டி மனு அளித்த பயனாளிக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பெயர் சேர்த்தல் ஆணையை வழங்கினார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை வருவாய் வட்டாட்சியர் விஷ்ணு பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News October 14, 2025
மயிலாடுதுறை: உரம் தட்டுப்பாட்டால் வேதனை

சீர்காழி தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள தனியார் உர கடைகள் மற்றும் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு யூரியா இல்லாததால் நடவு பணி பாதிப்படைந்து வருகிறது. உரிய நேரத்தில் நடவு செய்யவில்லை என்றால் அறுவடை நேரத்தில் மழையில் நெல்மணிகள் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்