News October 23, 2024
புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: பெட்ரோல் பங்க்கில் கைவரிசை.. சிறுவன் கைது!

உளுந்தூர்பேட்டை: மடப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க்கில் அய்யனார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அய்யனார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த போது, அவரிடம் இருந்த கைப்பையை ரூ.2,800 பணத்துடன் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரில் விசாரித்த போலீசார், தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: புகாரளித்தவரே குற்றவாளியான சம்பவம்!

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் லூயிஸ் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவியின் நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு வரும்போது, மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக மனைவியிடம் கூறியுள்ளார். அதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்ட பின்னர், ஜான் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் வரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
SIR படிவங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி, வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் இன்று (நவ.30) அறிவித்துள்ளார்.


