News December 6, 2024
புகாருக்கு வாட்ஸ-அப் பண்ணுங்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர், பதுக்குவோர் பற்றிய தகவல் தெரிந்தால், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230 759, ஹலோ போலீஸ் 83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567-290 113, 94981 01615ல் தகவல் தெரிவிக்கலாம். தடை செய்த குட்கா, புகையிலை பொருட்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
மண்டபம் தென் கடல் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 60 கிமீ வரை நாளை(டிச.11) வீசக்கூடும். இதனால் மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை(டிச.11) வழங்கப்பட மாட்டாது. வட,தென் கடல் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
ராமநாதபுரம்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 10, 2025
ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.


