News December 6, 2024

புகாருக்கு வாட்ஸ்-அப் பண்ணுங்க!

image

கோவை எஸ்பி அலுவலகம் நேற்று மாலை விடுத்த செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து புகாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212, whatsapp எண்: 77081-00100 என்ற எண்களை அழைத்து, தயங்காமல் தகவல் அளிக்கலாம் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

கோவை வரும் பிரதமர் மோடி!

image

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இயற்கை வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும், இந்த மாநாட்டின் போது பிரதமர் வேளாண் விஞ்ஞானிகளை சந்திக்கிறார்.

News November 12, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

மதுக்கரை அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி!

image

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வருண்(20). கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் படிக்கும் பிரகதீஸ்வரர் என்பவரை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு ஹாஸ்டல் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதியதில் பலியானார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!