News May 4, 2024

புகழ்பெற்ற வேலூர் கோட்டையின் சிறப்புகள்!

image

வேலூர் கோட்டை விஜயநகரப் பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 133 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றி அமைந்துள்ளது. இது பல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1806 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சி இக்கோட்டையிலேயே நடைபெற்றது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.

Similar News

News April 20, 2025

வேலூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, வேலூர் சார் ஆட்சியர் – 9445000417, ▶திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, ▶மாநகராட்சி ஆணையர் 7397389320, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, ▶வேலூா் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) 7402606606, ▶உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, ▶மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453. ஷேர் செய்யுங்கள்

News April 20, 2025

வள்ளிமலை கடற்படை வீரர் சாலை விபத்தில் பலி

image

காட்பாடி அடுத்த வள்ளிமலையைச் சேர்ந்தவர் சுனில்குமார் (24). கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்த இவர், அண்மைக்காலமாக ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சுனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சுனில்குமார் உடல் நேற்று (ஏப்ரல் 19) வள்ளிமலைக்கு கொண்டு வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

News April 20, 2025

வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மகிமை

image

வேலூர் விரிஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள் கோயில் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!