News April 17, 2025

பீகார் மாணவி பத்திரமாக மீட்பு

image

பாட்னாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது அண்ணனுடன் சண்டையிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ரயில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அப்பெண்ணை, 2 பெண்கள் பத்திரமாக மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மொழி தெரியாமல் தவித்த மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினர்.

Similar News

News November 23, 2025

வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

image

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

வேலூர்: மத்திய சிறைக்குள் விழுந்த டிரோனால் பரபரப்பு!

image

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அருகே மர்மநபர்கள் டிரோனை நேற்று பறக்க விட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த டிரோன் சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் விழுந்தது. அங்கு பணியில் இருந்த சிறை காவலர்கள் டிரோனை சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரோனை பறக்க விட்டவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!