News April 15, 2024
பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுச்சேரி தேர்தல் அலுவலகம் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பாக, புதுச்சேரியில் இயங்கும் பி.ஆர்.டி.சி. பஸ்களில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர் வைத்து புதுச்சேரி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News December 4, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
News December 4, 2025
புதுச்சேரி: அமைச்சர் பெயரில் போலி அறிவிப்பு!

புதுச்சேரி உள்துறை பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் நமச்சிவாயமே கல்வித்துறைக்கும் பொறுப்பு வகித்து வருகின்றார். பள்ளிகளுக்கு மழை விடுமுறையை நேற்று அளித்திருந்தார். அந்த அறிவிப்பையே பயன்படுத்தி இன்று (04.12.25) விடுமுறை என்று போலியாக தயாரித்து சமூக வலைதளத்தில் சில சமூக விரோதிகள் வெளியிட்டனர். இது குறித்து அமைச்சர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


