News May 8, 2025
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி
மையம் செயல்படுகிறது. கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 அழைக்கலாம். பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பக்க அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், ராணி அண்ணா கல்லூரி ஆகிய 3 மையங்கள் செயல்படுகிறது. இத்தகவலை ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
நெல்லை: B.E முடித்தால் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 31, 2025
நெல்லையில் தாயை அடித்துக் கொன்ற மகன்

மூலைக்கரைபட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி மனைவி ரெஜினா(43). பூல்பாண்டி 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் ரெஜினாவுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ரெஜினாவின் மகன் கொம்பையா தனது தாய் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இரும்பு பைப்பை எடுத்து தாயாரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.
News August 31, 2025
விநாயகர் சிலைகள் விஜர்சனம் 2500 போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 27-ம் தேதி நெல்லை மாநகரில் 100 விநாயகர் சிலைகளும், மாவட்டத்தில் 200 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சிலைகள் இன்று விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விமர்சனம் செய்யப்பட உள்ளன. இதை முன்னிட்டு நெல்லை மாநகர், மாவட்ட முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.