News April 9, 2025
பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 13, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவண்ணாமலை: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு!

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 அன்று மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
News November 12, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<


