News March 3, 2025
பிளஸ் 2 தேர்வு எழுதிய 35,294 மாணவ, மாணவிகள்

கோவை மாவட்டத்தில் இன்று 128 மையங்களில் நடைபெறும் +2 தேர்வை 35,294 பேர் எழுதுகிறார்கள். பொதுத்தேர்வை 363 பள்ளிகளைச் சேர்ந்த 16,353 மாணவர்கள்,18,941 மாணவிகள் என மொத்தம் 35,294 பேர் எழுதுகின்றனர். இது தவிர 649 தனித் தேர்வர்கள் எழுதுகின்றனர். 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை கண்காணிக்க 264 பறக்கும்படையினர், 2150 அறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 18, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
கோவை: Apple Dental care நிறுவனத்தில் வேலை!

கோவை, ராமநாதபுரத்தில் உள்ள Apple Dental care என்ற நிறுவனத்தில் Role -Receptionist பணியிடத்திற்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்குட்பட்ட முன் அனுபவம் மற்றும் அனுபவம் இல்லாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். டிகிரி படித்தவர்கள் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் <
News November 18, 2025
கோவையில் காலியான அலுவலகங்கள்!

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


