News March 25, 2025

பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

+2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில். பள்ளி மாணவர்கள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்”என்ற தலைப்பின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 26,27) இரு தினங்களுக்கு. தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் ஹோட்டல் அதியமான் பேலஸில் இந்த இலவச உயிர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இச்செய்தியை 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 21, 2025

தர்மபுரி: வயிற்று வலியால் தற்கொலை!

image

தர்மபுரி: பஞ்சம்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(55). விவசாயியான இவர் கடந்த நில ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முந்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பஞ்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 21, 2025

தர்மபுரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நேற்று(நவ.20) மஞ்சவாடி கணவாயில் சுமார் 7:00 மணியளவில் லாரி கவிழ்ந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், சம்பவம் இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

News November 21, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.20) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன் , தோப்பூரில் ஜீலான்பாஷா பாஷா , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!